Astrology

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத் திருவிழா நாளை கொடியேற்றம்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத் திருவிழா கொடியேற்றத்துடன் நாளையதினம் ஆரம்பமாகின்றது.

இதனையொட்டி கொடிச்சீலை எடுத்துவரும் சம்பிரதாய நிகழ்வு இன்று இடம்பெற்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத் திருவிழாவின் கொடியேற்றத்திற்காக செங்குந்தர் பரம்பரையினரால் கொடிச்சீலை எடுத்துவரப்பட்டு சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய சடங்கு நிகழ்வாகும்.

யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் அமைந்திருக்கும் வேல் மடம் முருகன் ஆலயத்தில் காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

பின்னர் அங்கிருந்து கொடிச்சீலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

கொரோனா தொற்றுக் குறித்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker