Srilanka

கேலிக்கூத்தாகும் சனநாயகம், கேள்விக்குட்படும் அரசியலமைப்பு 19வது திருத்ததினை மீறி பாதுகாப்பு அமைச்சராக சனாதிபதி பதவி வகிக்கலாமா

கேலிக்கூத்தாகும் சனநாயகம், கேள்விக்குட்படும் அரசியலமைப்பு 19வது திருத்ததினை மீறி பாதுகாப்பு அமைச்சராக சனாதிபதி பதவி வகிக்கலாமா?

 

பௌத்த தேசியவாத சிந்தனையுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள இராஜபக்ச குடும்பம், தொடக்கத்திலேயே பல சனநாயகப் படுகொலையை மேற்கொள்கின்றது. 19வது திருத்ததின் 51வது சரத்தின் பிரகாரம் சனாதிபதி அமைச்சு பதவி வகிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது. அதையும் மீறி தற்போது சனாதிபதி பாதுகாப்பு அமைச்சை தன்வசம் ஆக்கிள்ளார். இது நல்லாட்சி தத்துவமற்ற அரசியலைமைப்பை மீறும் சனநாயகப்படுகொலையாகும். தற்போது 19வது சரத்தை நீக்கப்போவதாக அரசு கூறுகின்றது. அவ்வாறு சில சரத்துக்கள் நீக்கப்பட்டாலும் கூட 19வது திருத்தத்திற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட சனாதிபதி அந்தச் சட்டத்திற்குட்பட்டவரே ஆகும். ஆகவே இந்த 19வது திருத்தந்தை வரைவதில் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சட்டதரணி, ஜெயம்பதி, பாராளுமன்ற உறுப்பினர் சட்டதரணி சுமந்திரன் போன்றோர் நல்லாட்சி அரசைப் பாதுகாக்க நீதிமன்றம் சென்றது போல் இந்த அரசியலமைப்பு மீறலுக்கு எதிராக ஏன் நீதிமன்றம் போக தயங்குகிறார்கள்? இது மாத்திரமன்று அமைச்சரவையில் முக்கிய துறைகள் இராஜபக்ச குடும்பத்திடம் சிறுபான்மையினர் ஒரு சிலர் மட்டுமே. தேசிய கொடியில் சிறுபான்மையினர் அடையாளங்கள் அகற்றப்பட்டுள்ளன. அமைச்சுக்களின் செயலாளர்களில் ஒருவர் கூட தமிழ் பேசுபவர் இல்லை, நால்வர் ஓய்வு பெற்ற இராணுவஅதிகாரிகள், பௌத்த பீடங்களில் பதவி ஏற்பு, மிகத் தீவிரமான இனவாதிகளுக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள், செஞ்சோலைப் படுகொலை நினைவு கூரலுக்கு தடை விதிக்கப்பட்டள்ளது. அதே போல் எதிர்காலத்தில் முள்ளிவாய்க்கால் நினவேந்தல், மாவீரர் தினம், தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளையும் கூட தடை செய்ய வாய்ப்புண்டு. பௌத்த தேசிய வாதத்தையே மூலதனமாகக் கொண்டு மேட்டிமைவாத சர்வதிகார போக்கில் ஆட்சியாளர்கள் செயற்படுகின்றார்கள். அபிவிருத்திக்கும், வேலைவாய்ப்பிற்கும் என கொள்கையின்றி அரசிற்கும் அரசு சார்புடையவர்களுக்கும் வாக்களித்த தமிழர்கள் இனியாவது சிந்திப்பார்களா? படித்தவர்கள் கூட பகிரங்கமாக ஆதரித்தார்கள் தமிழர் தேசத்தில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிற்கு ஆதரவாகவா எனும் கேள்வி எழுகிறது? ஆகவே இவ்வாறான சனநாயகப் படுகொலைக்கு எதிராக அணிதிரள வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.

வி.எஸ். சிவகரன் தலைவர் தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கம்

Media

Related Articles

Leave a Reply

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker