Srilanka

புதிய பேரூந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரச பேரூந்து ஊழியர்களுக்கு இடையில் முரண்பாடு தனியார் போக்குவரத்து சேவையுடன் இணைந்து பயணிக்க அரச போக்குவரத்து சேவை மறுப்பு

புதிய பேரூந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரச பேரூந்து ஊழியர்களுக்கு இடையில் முரண்பாடு தனியார் போக்குவரத்து சேவையுடன் இணைந்து பயணிக்க அரச போக்குவரத்து சேவை மறுப்பு
கடந்த வருடம் நகரத்திட்டமிடல் அதிகாரசபை மற்றும் மன்னார் நகரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புதிய பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டு கடந்த மாதம் வைபவரீதியாக புதிய பேரூந்து நிலையம் ஆரம்பிக்கப்பட்டு பொது போக்குவரத்துக்கு என திறந்து விடப்பட்டிருந்தது
குறித்த பேருந்து நிலைய தரிப்பிடங்களானது அரச பேரூந்து மற்றும் தனியார் பேரூந்துகள் இணைந்து போக்குவரத்து சேவையை வழங்கும் முகமாக அமைக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் தனியார் போக்குவரத்து சேவையானது   புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து கடந்த மாதம் தொடக்கதில் இருந்தே போக்குவரத்து பணிகளை ஆரம்பித்தது
  ஆனாலும் அரச போக்குவரத்து சேவையானது இதுவரை புதிய பேரூந்து நிலையத்திற்கு சேவைக்கு வராமல் தற்காலிக பேரூந்து நிலையத்தில் இயங்கிவந்த நிலையில் இன்றையதினம் அரச போக்குவரத்து சேவையானது புதிய பேரூந்து நிலையத்துக்கு சேவைக்கு என வருகை தந்த அரச பேருந்து ஊழியர்கள் தனியார் பேருந்து சேவை மற்றும் இணைந்த போக்குவரத்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்தும் முகமாக அரச பேரூந்துகளை நிறுத்தியதுடன் தனியார் போக்குவரத்து ஊழியர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதை தொடர்து மன்னார் புதிய பேரூந்து நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டது
இரு பேரூந்து சேவைகளையும் சமரசப்படுத்தும் முகமாக மன்னார் நகரசபையில் மன்னார் நகரசபை தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் பொலிஸார் மற்றும் அரச தனியார் போக்குவரத்து ஊழியர்களை ஒன்றிணைத்து பேச்சு வார்த்தை ஒன்று இடம் பெற்றது அதன் போது முரண்பாடுகளை கலைந்து மக்களின் நன்மைக்காக இரு சாராரும் இணைந்து ஒரே தரிப்பிடத்தில் தரித்து மக்களுக்கான இலகுவான சேவையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடப்பட்டது
இருப்பினும் தாங்கள் ஒருபோதும் தனியார் போக்குவரத்து சேவையுடன் இனைந்து செயற்படப்போவதில்லை எனவும் இணைந்து செயற்படும் பட்சத்தில் காலப்போக்கில் முரண்பாடுகள் தோற்றம் பெறலாம் எனவும் தங்களுக்கு தனியான இடத்தை ஒதுக்கி தரவேண்டும் எனவும் அப்படியில்லாவிட்டால் புதிய தரிப்பிடத்தில் தங்களுக்கு என தனி தரிப்பிடத்தை ஒதுக்கி தரவேண்டும் இல்லா விட்டால் வடக்கு கிழக்கு முழுவதும் உள்ள அரச போக்குவரத்து ஊழியர் சங்கத்தினருடன் இணைந்து பண் பஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாக தெரிவித்து வெளியேறியுள்ளனர்
அதே நேரத்தில் நாங்கள் நகர சபையில் அட்டவணைக்கு அமைவாக செயற்படதாயரக இருப்பதாகவும் அரச சேவைக்கு இடையூரு ஏற்படாதவகையில் விட்டு கொடுப்புடன் மக்களுக்கான சேவையை வழங்கி அரச பேரூந்து சேவையுடன் இணைந்து பயணிக்க தயார் என தெரிவித்துள்ளனர் தனியார் போக்குவரத்து சேவையினர் தெரிவித்துள்ளனர்
இருப்பினும் குறித்த கூட்டத்தில் எந்த ஒரு சமரசமும் எட்டப்படாத நிலையில் பல்வேறு கட்ட பேச்சுக்களுக்கு பின்னர் இணைந்த சேவையை வழங்காத பட்சத்தில் அரச சேவை பேரூந்துகளை தங்களுக்கு சொந்தமான இடங்களில் நிறுத்தி போக்குவரத்தை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த பிரச்சினை காரணமாக மன்னார் பேரூந்து நிலையத்திற்கு போக்குவரத்துக்கு என வரும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர் கொள்வதுடன் தொடர்சியாக அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு இடையில் மோதல் போக்கும் காணப்படுகின்றது

Related Articles

Leave a Reply

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker