SportsSrilanka

சீரற்ற வானிலை – மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை!

சீரற்ற வானிலை – மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை!

நாட்டின் பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலைக் காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதன்படி, அனர்தங்களினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் மூன்று மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தொடர்ந்தும் நிலவும் கன மழை காரணமாக ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பாக தகவல்களை அறிவிப்பதற்கு 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் தொடர்புக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் அனர்த்தங்கள் இடம்பெறுமாயின் அது குறித்து விரைவாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பிரதேச செயலக மட்டத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker