Srilanka

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்பு புதிது புதிதாக முளைக்கும் சோதனைச்சாவடிகள்

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்பு புதிது புதிதாக முளைக்கும் சோதனைச்சாவடிகள்!

தமிழர் தேசத்தில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்பு புதிது புதிதாக பல இடங்களில் சோதனைச்சாவடிகளை அமைத்து மக்களை அசோகரியங்களுக்கு உள்ளாக்குவதுடன் இராணுவ ஆட்சி நடப்பது போன்ற உணர்வும் ஏற்படுத்தியுள்ளது.

வீதிச்சோதனை என்னும் பெயரில் வீதியால் செல்பவர்களை மறித்து அடையாள அட்டைகள் பரிசோதிப்பதும் அவர்களை இறக்கி பதிவிடுவதும் இந்த நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக கருதிவிட முடியாது இப்படி தென்பகுதியில் இல்லை அப்போ ஏன் தமிழர் தாயகத்தில்

சட்ட விரோத செயற்பாட்டை கட்டுப்படுத்துவதென்றால் பொலிஸ் சோதனை சாவடிகளை அமைத்து தமிழ் பொலிசாரை நியமிக்க முடியும்.

அபிவிருத்தி அடைந்த நாட்டில் இப்படிப்பட்ட சோதனை சாவடிகள் அவர்கள் நாட்டின் எல்லைப்பகுதியிலே வைத்திருப்பார்கள்.

பாடசாலை சிறுவர்கள் ஆசிரியர்கள்,அரச உத்தியோகத்தர்கள் இதனால் அதிகமாக பாதிக்கப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.

மக்களிடம் உரையாடும் பல இராணுவத்தினர் கடும் தொணியில் உரையாடுவதை காணமுடிந்தது.

 

Related Articles

Leave a Reply

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker